India
ஒரே மாதத்தில் 15-வது பாலம்... அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்: பாஜக கூட்டணி ஆட்சியில் தொடரும் சோகம்!
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் இங்கு, தற்போது ஒன்றன் பின் ஒன்றாக பாலம் இடிந்து விழும் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் அங்கு பல்வேறு பகுதிகளில் இருக்கும் பாலங்கள் அடுத்தடுத்து என இடிந்து விழுந்து வருகிறது. ஏற்கனவே அங்கு புதிதாக கட்டிக்கொண்டிருந்த பாலம், கட்டி முடித்து திறப்புக்கு காத்திருந்த பாலம் என அடுத்தடுத்து தொடர்ந்து சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15-வதாக பாலம் ஒன்று இடிந்துவிழுந்துள்ளது. பீகாரின் அராரியா மாவட்டத்தின் அம்ஹாரா கிராமத்தின் அருகில் உள்ள பர்மன் ஆற்றின் மீது கடந்த 2008-2009 ஆண்டு காலத்தில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பாலம் கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளத்தில் சேதமடைந்த நிலையில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாலத்தின் பராமரிப்பு வேலைகள் முடிந்து கடந்த 2022-ம் ஆண்டு இந்த பாலம் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
ஆனால், கடந்த 16-ம் தேதி இந்த பாலம் இடிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இடிந்துவிழும் 15-வது பாலமாக இது அமைந்துள்ளது. பீகாரில் இந்த ஆண்டு கடும் மழைப்பொழிவு காரணமாக அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவது ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?