India

அரசுப் பள்ளிகளில் இனி வாரத்திற்கு 6 நாட்களுக்கு முட்டை... தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா !

குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்று முதன்முதலில் தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த பிறகு, காமராஜர் ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சத்துணவு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் வாரத்துக்கு 2 முட்டைகள் வழங்கப்பட்டது.

பின்னர் 2007-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் வாரத்திற்கு 3 முட்டையும், 2008 ஆம் ஆண்டு வாரம் 5 முட்டையும் இத்திட்டத்தில் வழங்கப்பட்டது. அப்போது கலவை சாதமும் அறிமுகப்படுத்தபட்டது. கலைஞர் அறிமுகப்படுத்திய வாரம் 5 முட்டைகள் தற்போது வரை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. மாணவர்கள் ஆரோக்கியமாக சாப்பிட்டு நன்றாக படிக்க வேண்டும் என்ற நோக்கில் காலை உணவுத் திட்டமும் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் உருவாக்கப்பட்டு செய்லபடுத்தப்பட்டு வருகிறது.

தற்போது வாரத்தில் 5 நாட்கள் இயங்கக்கூடிய தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவு என இரு வேளைகளிலும் மாணவர்களுக்கு சத்தான சிறுதானிய வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவில் தற்போது வரை வாரந்தோறும் 5 முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முட்டைகள் வேறு வேகவைத்த மூட்டைகளாக அல்லாமல், மிளகு முட்டை, தக்காளி முட்டை, மசாலா முட்டை என விதவிதமாக வழங்கப்பட்டு வருகிறது,.

தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ள இந்த அருமையாக உணவுத் திட்டத்தை நாடே பாராட்டி வரும் நிலையில், தற்போது கர்நாடக அரசும் தங்கள் மாநில அரசு பள்ளிகளில் வாரந்தோறும் 6 முட்டைகள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசுப் பள்ளிகளில் வாரந்தோறும் 6 நாட்களுக்கு முட்டை வழங்க முடிவு செய்துள்ளது அம்மாநில அரசு. அதன்படி தொழிலதிபர் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படவுள்ளது. வரும் ஜூலை 20-ம் தேதி அம்மாநில அரசுக்கும் அறக்கட்டளைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி அறக்கட்டளை 3 ஆண்டுகள் அரசுப் பள்ளிகளுக்கு முட்டைகள் விநியோகிக்கும். இதற்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடும் அந்த அறக்கட்டளை செய்துள்ளது. முன்னதாக பாஜக அரசு ஆட்சியில் இருந்தபோது 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முட்டை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததையடுத்து, அதனை 2 மாற்றியது.

இந்த சூழலில் தற்போது வாரத்துக்கு 6 முட்டைங்கள் வழங்கப்படவுள்ளது. இந்த அறக்கட்டளை முறையாக இந்த திட்டத்தை செய்லபடுத்தினால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க அரசாங்கம் சிந்திப்பதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாது பங்காரப்பா தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மாடலை நாடே பாராட்டி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் மகளிர் இலவச பேருந்து, மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற அருமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது தமிழ்நாட்டுக்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.

Also Read: #FactCheck : காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறு : அண்ணாமலைக்கு ஆதாரத்துடன் குவியும் கண்டனம் !