India

மணிப்பூரில் மீண்டும் வன்முறை : CRPF வீரர் சுட்டுக்கொலை - வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு!

மணிப்பூரில் குக்கி இனத்தவருக்கும், மெய்தி இனத்தவருக்கும் இடையே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மோங்புங் என்னும் கிராமத்தில் சி.ஆர்.பி.ஆர். பாதுகாப்புப்படையினர் மீது, ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியது.

இதில், பீகாரைச் சேர்ந்த அஜய்குமார் என்ற ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், அங்கு மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

மணிப்பூரில் ஒருவருடத்திற்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசு இந்த வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப்பார்த்து வருகிறது என்பதுதான் வேதனையாக உள்ளது.

Also Read: “பொது மருத்துவ கல்வி முறையை கட்டமைப்பதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு” -முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்!