India

13 இடைத்தேர்தலில் 10 இடங்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி : பா.ஜ.க படுதோல்வி!

தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து இன்று 13 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

மேற்குவங்கம்:

மேற்குவங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்று பெற்றுள்ளனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.

மேலும் பா.ஜ.கவிடம் இருந்த இரண்டு தொகுதிகளை திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இமாச்சல் பிரதேசம் :

இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஹமிர்பூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

உத்தரகாண்ட்:

உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

அதேபோல் பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மத்தியப் பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

பீகார்

பீகாரில் ரூபாலி இடைத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது. இங்கு சங்கர் சிங் என்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் 1,24,053 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். 13 இடைத்தேர்தலில் பா.ஜ.க 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் : வரலாற்று வெற்றி பெற்ற தி.மு.க!