India

”வேலைவாய்ப்பின்மைக்கு மோடி அரசே காரணம்”: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணியின் முக்கிய பிரச்சாரமாக வேலையின்மை இருந்தது.மேலும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பணியிடங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நிரப்பப்படும் என ராகுல் காந்தி வெளிப்படையாகவே அறிவித்தார்.

இந்நிலையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு மோடி அரசே காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூவலைதள பதிவில், ”கடந்த 7 ஆண்டுகளில், தனியார் உற்பத்தி நிறுவனங்களில் 54 இலட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

IIM லக்னோ வெளியிட்ட அறிக்கையின் படி, படித்த இளைஞர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பின்மையால் அவதிக்குள்ளாகியுள்ளனர். CMIE அறிக்கையின் படி, தற்போது நாட்டில் வேலைவாய்ப்பின்மை 9.2 விழுக்காடாகவும், வேலைவாய்ப்பின்மையில் பெண்களின் பங்கு 18.5 விழுக்காடாகவும் இருக்கிறது.

ILO அறிக்கையின் படி, வேலையில்லாமல் இருக்கும் 83விழுக்காட்டினர். 2023ஆம் ஆண்டில், புதிய வேலைவாய்ப்பு விகிதம், 10 விழுக்காடு குறைந்துள்ளது.PLFS அறிக்கையின் படி, நகர்பகுதிகளில், 6.7விழுக்காட்டினர் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “வேலையின்மை, பணவீக்கம்.. இந்த ஆண்டு பரிசுகள் இதுதான்” : மோடி அரசின் அவலங்களை பட்டியலிட்ட ப.சிதம்பரம்!