India

இந்து மதத்திற்கு எதிராக ராகுல் காந்தி பேசவில்லை : சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் கூறுவது என்ன?

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் இந்துக்களுக்கும், இந்து மதத்திற்கும் எதிரானவர்கள் என்று தொடர்ச்சியாக பிரதமர் மோடி முதல் பா.ஜ.க தொண்டவர்கள் வரை எல்லோரும் பேசினர்.இருந்தும் இவர்களது இந்த பிரச்சாரம் எடுபடவில்லை. இந்தியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் அதிக பலத்துடன் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளது. இது பா.ஜ.கவுக்கும் அச்சத்தையும் கடுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதனால்தான் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதை, திரித்து இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக பா.ஜ.கவினர் கூக்குரலிட்டு வருகிறார்கள். மேலும் ராகுல் காந்தியின் வீட்டு முன்பும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பா.ஜ.க அரசை யார் குறை சொன்னாலும், அவர்கள் இந்து விரோதிகள், இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பதை தொடர்ந்து பா.ஜ.க சித்தரித்து வருகிறது.

இந்நிலையில், இந்து மதத்திற்கு எதிராக ராகுல் காந்தி பேசவில்லை என சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவிமுக்தேஸ்வரானந்த்,”எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்து மதத்திற்கு எதிராக பேசவில்லை. ஆனால், ஊடகங்களும், பா.ஜ.க ஐ.டி செல்களும், ராகுல் காந்தி இந்து மதத்திற்கு எதிரானவர் போல பொய் பரப்பி வருகிறார்கள" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”எனது பேச்சை நீக்குவதால் உண்மை மாறாது” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அதிரடி!