India

”மணிப்பூர் செல்லதான் பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை” : ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெறும் இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

அதே நேரம் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வன்முறை நீட்டித்து வரும் மணிப்பூர் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தி மணிப்பூர் சென்றதை, பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்துடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வரும் வேளையில், non -Bioligical பிரதமர் மாஸ்கோ சென்றுள்ளார். ஆனால், பிரதமர் மோடி கடந்த 14 மாதங்களில் ஒரு முறை கூட மணிப்பூர் செல்லவில்லை. கலவரத்தை சரிசெய்ய, எவ்வித நேரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். 200 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு தங்கள் கிராமங்களைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இப்படி ஒரு வருடமாக மணிப்பூர் மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் நா கூசாமல் பிரதமர் மோடி பொய் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மணிப்பூர் - ”வாய்ச்சவடாலை தவிர வேறு எதுவும் மோடிக்கு தெரியாது” : ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!