India

ராஜஸ்தான் - அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க தலைவர் : காரணம் இதுதான்!

மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் தனிபெரும்பான்மை பெற்று ஆட்சியை பா.ஜ.க பிடிக்கும் என கூறிய நிலையில் 240 தொகுதிகளி மட்டுமே அவர்ளால் வெற்றி பெற முடிந்தது. இதனால் கூட்டணி கட்சிகளில் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துக் கொண்டனது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சவால் விட்டு அதில் தோல்வி அடைந்ததால் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களவை தேர்தலில் போது அமைச்சர் கிரோடி லால் மீனாவுக்கு 7 தொகுதிகளில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் 7 தொகுதிகளில் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் கூட தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

பிறகு தேர்தல் முடிவில், 7 தொகுதிகளில் பா.ஜ.க 4 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. இதையடுத்து எப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வீர்கள் என்ற கிரோடி லால் மீனாவை தொடர்ந்து தாக்கி வந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் கிரோடி லால் மீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வந்த உடனே தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு அவர் கொடுத்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமாவை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடி முதல் ஒன்றிய அமைச்சர்கள் நாடாளுமன்றத்திலேயே பொய்களை பேசி வரும் நிலையில் தேர்தல் சவாலில் தோல்வி அடைந்ததால் அமைச்சர் பதவியை பா.ஜ.க தலைவர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். ச்ச பா.ஜ.க கட்சியில் இப்படி ஒரு தலைவரா? என பொதுமக்கள் முனுமுனுத்து வருகின்றனர்.

Also Read: நாடாளுமன்றத்தில் கர்ஜித்த ராகுல் காந்தி... பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸால் அச்சுறுத்தல்... பாதுகாப்பு அதிகரிப்பு !