India

பசு கடத்தியதாக கூறி 2 இந்துக்களை தாக்கிய இந்துத்வ கும்பல்... லாரியை திறந்து பார்த்தபோது ஷாக்!

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. முந்தைய ஒன்றிய பாஜக ஆட்சியில் பசுக்களை கொண்டு செல்வதாக கூறி பல்வேறு இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த தாக்குதலில் பலரும் உயிரிழந்தும் உள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் முக்கியமாக குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கிளேயே தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த கொடூர சம்பவங்கள் நடைபெறும் ஒவ்வொரு சமயத்திலும் பாஜக அரசுக்கு கண்டனங்கள் எழுந்து வந்தது. இருப்பினும் பாஜக ஆதரவாளர்கள் இதையே திரும்ப திரும்ப செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாஜக ஆளும் ராஜஸ்தானில் பசுக்களை கடத்தி செல்வதாக கூறி, 2 நபர்களை கடுமையாக பசு காவலர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் கடந்த ஜூன் 29-ம் தேதி இரவு சுமார் 20 பேர் கொண்ட கும்பல், மினி லாரி ஒன்றை மடக்கி அதிலிருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் பசுக்களை கடத்தி செல்வதாக கூறி தங்கள் செருப்பு, கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு இரத்தம் வரும் அளவிற்கு கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்தே லாரியின் உள்ளே பார்த்தபோது, அதில் பசுக்களுக்கு பதிலாக எலுமிச்சை பழங்கள் இருந்துள்ளது. இதையடுத்து பயந்துபோன அந்த கும்பல் அந்த இடத்திலிருந்து தப்பியோடியது. பின்னர் பாதிக்கப்பட்ட 2 பேரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததோடு, போலீசுக்கும் தகவல் அளித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, ஹரியானாவைச் சேர்ந்த சோனு பிஷ்னோய் (29) மற்றும் சுந்தர் பிஷ்னோய் (35) என்றும், அவர்கள் எலுமிச்சை பழங்களை ஏற்றிக்கொண்டு கொண்டு ராஜஸ்தானின் சுருவில் இருந்து பஞ்சாபின் பதிண்டா பகுதிக்கு சென்றதும், அப்போது இந்த கும்பல் வழிமறித்து தாக்குதலால் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 20 பேரில் 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை, உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பலரு மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ராஜஸ்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்த பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர் தனது முதல் நாளிலேயே இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று அராஜகத்தில் ஈடுபட்டார். இந்த சூழலில் தற்போது அங்கே இவ்வளவு பெரிய நிகழ்வுஅரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரூ.167 கோடி தங்க கடத்தலுக்கு துணை போன அண்ணாமலை என்ன பதில் கூறப் போகிறார் ? - செல்வப்பெருந்தகை கேள்வி!