India

3 நாட்களில் 3-வது சம்பவம்.. மோடியின் ஹாட்ரிக் ஆட்சியில் வீக் ஆக இருக்கும் கட்டுமானப் பணிகள் !

ஒன்றியத்தில் பாஜக ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஊழல் அதிகரித்த வண்ணமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதானி ஊழலில் இருந்து தேர்தல் பத்திரம் என பல முறைகேடுகள் அடுத்தடுத்து என வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தற்போது ஒன்றிய அரசின் கட்டுமானப் பணிகளிலும் ஊழல் நடந்துள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

மூன்றாவது முறையாக தற்போது பதவியில் இருக்கும் மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் விமான நிலையம், இரயில்வே நிலையம் உள்ளிட்டவற்றில் கடந்த சில நாட்களாக சேதாரம் ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து என 3 நாட்களாக 3 விமான நிலையங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது.

* கடந்த ஜூன் 27-ம் தேதி மத்திய பிரதேசத்தில் கனமழை காரணமாக ஜபல்பூர் விமான நிலையத்தின் மேற்கூரையில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அந்த மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயம் இல்லை.

* கடந்த ஜூன் 28-ம் தேதி (நேற்றைய முன்தினம்) டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் உள்ள மேற்கூரை மழை காரணமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

* கடந்த ஜூன் 29-ம் தேதி (நேற்று) குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகள் இறங்கும் பகுதியில் உள்ள மேற்கூரையில் தண்ணீர் தேங்கியது. எனவே இதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டபோது விமான நிலையத்தின் மேற்கூரை சட்டென்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

- இவ்வாறாக தொடர்ந்து அடுத்தடுத்து என 3 நாட்களில் 3 வெவ்வேறு பகுதிகளில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பலர் மத்தியிலும் மோடி ஆட்சியின் நிலை குறித்த விமர்சனங்கள் மேலும் எழுந்துள்ளது.

Also Read: பீகாரில் 9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்... அம்பலமாகும் பாஜக கூட்டணி அரசின் ஊழல்கள் !