India
நீட் கேள்வித்தாள் கசிவு வழக்கு : முக்கிய குற்றவாளி கைது... ஏராளமான தேர்வுகளில் மோசடி செய்தது அம்பலம் !
நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.
இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. தொடர்ந்து இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அங்கு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே நீட் தேர்வுக்கு முதல் நாள் இரவு, நீட் வினாத்தாள் கிடைத்ததாக இதன் மூலம் ஏராளமானோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து தற்போது வரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவி அத்ரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட் கேள்வித்தாள் கசிவில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் முக்கிய நபரான ரவி அத்ரி நீட் கேள்வித்தாள் கசிவில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹரியானா மாநிலம் ரோத்தக் மருத்துவக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் மருத்துவம் படித்துள்ள ரவி அத்ரி கடைசி ஆண்டு தேர்வு எழுதாமல் கேள்வித்தாள் மோசடி கும்பலில் சேர்ந்துள்ளார்.
இவர் எய்ம்ஸ் பி.ஜி நுழைவுத் தேர்வு கேள்வித்தாள் கசிவில் கைது செய்யப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேச காவலர் தேர்விலும் இந்த நபர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது எனது கேள்வித்தாள் வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!