India

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு : பீகார் DGP சொல்லும் அதிர்ச்சி தகவல் என்ன?

இந்தியா முழுவதும் மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இதில் பீகார் மாநிலத்தில் பல மையங்களில் மோசடி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பாட்னா போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்ட 4 மாணவர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுக்கு முன்னதாக குறிப்பிட்ட ஒரு தேர்வு மையத்தில் 35 மாணவர்கள் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கும்பல் உதவி உள்ளது.

மேலும் எரிந்த நிலையில் சில வினாத்தாள்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பான விசாரணையில் பெரும் பணம் கைமாறிய ஆவணங்கள், காசோலைகளை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் பீகார் ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை குறித்து கூடுதல் டிஜிபி கான் கூறுகையில், ”எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வினாத்தாள்களை ஒப்பீட்டு பார்பதற்காக தேசிய தேர்வு முகமையிடமிருந்து வினாத்தாள் உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்பட்டது. இப்போதுதான் வினாத்தாள் கிடைத்துள்ளது.அதனை கைப்பற்றப்பட்ட வினாத்தாளுடன் ஒப்பீட்டு செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில தகவல்களை தேசிய தேர்வு முகமையிடம் கேட்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்திய விசாரணையில் நீட் கேள்வித்தாள் கசிந்துள்ளதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

தற்போது இந்த வினாத்தாள் யாரிடமிருந்து கிடைத்தது? எப்படி இந்த தேர்வு மையங்களை வந்தடைந்தது என்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த மோசடியில் மாநிலங்களுக்கு இடையே செயல்படும் நீட் மோசடி கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: மக்கள் மத்தியில் அம்பலமான நீட் திருட்டு : ஆதாரங்களுடன் கூறும் முரசொலி!