India

எழுத்தாளர் அருந்ததி ராய் மீது UAPA வழக்கு? : எழுத்தாளர்கள் குரல்களை ஒடுக்கும் பா.ஜ.க!

எழுத்தாளர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கேரளாவை சேர்ந்த அருந்ததி ராய். எங்குப் பெண்களுக்கும், சாமானிய மக்களும் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கு இவரது குரல் கேட்கும்.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு இவர் நிகழ்ச்சி ஒன்றில் காஷ்மீர் குறித்துப் பேசியதற்கு உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

2010ம் ஆண்டு Azadi The Only Way என்ற தலைப்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் எழுத்தாளர் அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியர் ஹீசைன், சையத் அலி ஷா கிலானி, வரவர ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.

இவர்கள் காஷ்மீர் இந்தியாவிலேயே இல்லை என பிரிவினை வாதத்தைப் பேசியதாகக் கூறி காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 14 ஆண்டுகள் கழித்து எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திட்டமிட்டு எழுத்தாளர் அருந்ததி ராயை கைது செய்ய ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read: நீட் வினாத்தாள் கசிவு வழக்கு : பீகார் DGP சொல்லும் அதிர்ச்சி தகவல் என்ன?