India

ஓடுபாதையில் ஒரே நேரத்தில் சென்ற இரண்டு விமானங்கள் : நொடி பொழுதில் தடுக்கப்பட்ட பெரும் விபத்து !

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையம் இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக திகழ்கிறது. பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய விமான நிலையம் என்ற பெயரினை மும்பை விமான நிலையம் பெற்றுள்ளது.

தினசரி நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில் இரண்டு விமான ஓடுபாதைகள் உள்ளன. அந்த வகையில் இங்குள்ள விமான ஓடுபாதையில் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள ஒரு விமான ஓடுபாதையில் இண்டிகோ விமானம் ஒன்று ஓடுபாதையில் தரையிறங்க, அதே ஓடு பாதையில் சிறிது இடைவெளியில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் சில வினாடிகள் காலதாமதம் ஆகியிருந்தால் கூட பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு விமானங்களை இயக்க உத்தரவிட்ட விமான போக்குவரத்து கட்டுபாட்டு பிரிவு கண்காணிப்பு கோபுர அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள இண்டிகோ மற்றும் ஏர் இந்தியாநிறுவனங்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையின் கிடைத்த பிறகே விமானம் டேக் ஆப் ஆனது என்றும், லாண்ட் ஆனதும் என்றும் கூறியுள்ளன. இதனால் இந்த தவறு கண்காணிப்பு கோபுர அதிகாரியின் தவறாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: "எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்" - கேபினட் அமைச்சர் பதவி கிடைக்காததால் நடிகர் சுரேஷ் கோபி அதிருப்தி !