India

பங்குச்சந்தை முறைகேட்டில் மோடி, அமித்ஷாவுக்கு தொடர்பு : ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

பங்குச்சந்தையில் நடந்துள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். போலியான கருத்துக் கணிப்புகளை நடத்தி சிலர் லாம் ஈட்டுவதற்காக மோடியும், அமித்ஷாவும் உதவி இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, " தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆலோசனை வழங்கியது ஏன்?

முதலீட்டு ஆலோசனை வழங்குவது அவர்களின் வேலையா? வணிகக் குழுவுக்கு சொந்தமான ஒரே ஊடகத்திற்கு இரண்டு பேரும் கேட்டி கொடுத்தது ஏன்?. போலியான கருத்துக்கணிப்புகள் மூலம் சிலர் லாபம் அடையே பங்குச்சந்தையில் முறைகேடு நடந்துள்ளது.

பங்குச்சந்தையில் நடந்துள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் முடிவு வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.38 லட்சம் கோடி இழப்பு. இதனால் சாதாரண முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது அதானி பிரச்சனையைவிட மிகவும் முக்கியமான பிரச்சனை. இது கிரிமினல் குற்றமும் கூட” என தெரிவித்துள்ளார்.

Also Read: வாரணாசியில் சரிந்த மோடியின் செல்வாக்கு : இனி மோடி பிம்பம் எடுபடாது!