India
🔴Live Updates : மக்களவைத் தேர்தல் 2024... மோடியை விட பெரிய வெற்றியை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் !
உ.பியில் இந்தியா கூட்டணி முன்னிலை!
உத்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 44 இடங்களில் முன்னிலை; 36 இடங்களை பெற்று பாஜக பின்னடைவு !
பாஜகவின் அராஜகங்களை மீறி இந்தியா கூட்டணி வெற்றி !
பாஜகவின் கனவு தமிழ்நாட்டில் பழிக்கவில்லை. பிரதமர் மோடிக்கு எதிர்ப்பலைகள் உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவில் ரீதியான தாக்குதலை பாஜக மேற்கொண்டது.
வெறுப்பு பிரச்சாரத்தால் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சித்தது. பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட அராஜகங்களையும் மீறி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அண்ணாமலைக்கு நன்றி!
தமிழ்நாட்டில் இரட்டை இலக்கங்களில் பாஜக வெற்றி: 00. அண்ணாமலைக்கு நன்றி!
- முகமது சுபேர் ட்வீட்!
கனிமொழியை எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி !
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தமாக வேட்பாளர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜோன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களுக்கு டெபாசிட் காலியானது !
தருமபுரி தொகுதியில் திமுக வெற்றி !
நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி.
பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
கனிமொழி வெற்றி!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி!
பா.ஜ.கவை கைவிட்ட ராமர்!
உத்தர பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் லல்லு சிங் படுதோல்வி!
பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் அபார வெற்றி.
சு.வெங்கடேசன் வெற்றி!
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Exit Poll கணித்தவர் கண்ணீர்!
340 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெறுமென கணித்த Axis My India நிறுவனத்தின் உரிமையாளர் ப்ரதீப் மேதா, கணிப்பு பொய்த்ததால் தொலைக்காட்சியில் கண்ணீர் விட்டு அழுகை!
தர்மபுரியில் திமுக முன்னிலை !
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 10,422 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
இதன் மூலம் தமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ராகுல் காந்தி வெற்றி!
வயநாடு, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி!
உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி வெற்றி!
ஸ்மிருதி இரானி தொடர் பின்னடைவு !
பாஜக ஆளும் உ.பி-யின் அமேதியில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி தொடர் பின்னடைவு !
காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 0 !
தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு இந்த முறையும் ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட பிடிக்காமல் தோல்வியை தழுவியுள்ளது பாஜக.
மோடியை விட 2 மடங்கு முன்னிலையில் ராகுல் !
உத்தர பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் 3,31,974 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை !
வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை விட இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக வேட்பாளர் தொடர் பின்னடைவு !
மசூதியை நோக்கி அம்பு விடுவது போல் செய்கை காட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட தெலங்கானாவின் ஐதராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா தொடர் பின்னடைவு !
கல்பனா சோரன் முன்னிலை!
ஜார்க்கண்ட் காண்டே சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் கல்பனா சோரன் முன்னிலை!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது திமுகவின் நல்லாட்சிக்கான அங்கீகாரம்!
"தேர்தலில் வெளிவரும் முடிவுகளால், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. மூன்று வருட திமுகவின் நல்லாட்சிக்கான அங்கீகாரத்தை மக்கள் அளித்துள்ளார்கள். "
- தொடர்ந்து திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேட்டி !
ஒன்றிய இணையமைச்சரை வீழ்த்திய இளம் காங். வேட்பாளர்!
கர்நாடகாவின் பிதார் தொகுதியில் போட்டியிட்ட 25 வயது காங்கிரஸ் வேட்பாளர் சாகர் ஈஸ்வர் காந்த்ரே வெற்றி!
தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒன்றிய இணையமைச்சர் பக்வந்த் கூபாவை வீழ்த்தி, வெற்றி பெற்ற இளம் காங்கிரஸ் வேட்பாளருக்கு குவியும் வாழ்த்து
தோல்வி முகத்தில் பிரஜ்வல் !
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான கர்நாடகாவின் ஹாசன் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா சுமார் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு !
மாணிக்கம் தாகூர் முன்னிலை !
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை !
உடைந்த மோடி பிம்பம்!
கடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, இம்முறை 350, 400 இடங்களை கைப்பற்றுவோம் என கூறிவந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி 232 இடங்களில் மட்டுமே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது!
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கடும் போட்டியால் பாஜக மேலும் பல இடங்களில் தோல்வியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!
சண்டிகரில் காங்கிரஸ் முன்னிலை!
சண்டிகர் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் திவாரி முன்னிலை!
65,000 வாக்குகள் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்!
உத்தரப் பிரதேசத்தின் 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ், ரேபரேலி, சகாரன்பூர், சீதாப்பூர், பாராபங்கி தொகுதிகளில் சுமார் 65,000க்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது.
ஒன்றிய பாஜக அமைச்சர்கள் பின்னடைவு!
பாஜகவி பல இடங்களில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஆர்.கே.சி.சிங், கிரிராஜ் சிங், ஸ்மிருதி இரானி, நித்தியானந்தா ராய் உள்ளிட்ட ஒன்றிய பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவு!
அம்பலமான கருத்து கணிப்பு முடிவுகள் !
நாடாளுமன்ற தேர்தலில் 543 இடங்களுக்கான முன்னணி நிலவரங்களும் இப்போது தெரியவந்துள்ளது. இந்த முடிவுகள் மோடிக்கு அரசியலுக்கான தார்மீக தோல்வியாக இருக்கும்.
இரண்டாவதாக அவரால் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் முழுக்க முழுக்க அம்பலமாகியுள்ளன.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
திக்குமுக்காடி முன்னிலை வகிக்கும் பா.ஜ.க!
பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகிக்கும் 90க்கும் மேலான தொகுதிகளில் 10,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசமே நிலவுவதால், எப்போது வேண்டுமானாலும் நிலை மாறலாம் என எதிர்பார்ப்பு.
மணிப்பூரில் காங்கிரஸ் முன்னிலை!
மணிப்பூரில் பாஜக ஆளும் 2 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை !
திமுகவினர் கொண்டாட்டம்!
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்!
அயோத்தியில் பாஜக வேட்பாளர் பின்னடைவு!
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில், பாஜக வேட்பாளர் பின்னடைவு!
அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணியின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 37,534 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
ராகுல் காந்தி முன்னிலை !
கேரளாவின் வயநாடு தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை.
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை!
ஸ்மிருதி இராணி 23,000 வாக்குகள் பின்னடைவு!
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில், பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இராணி பின்னடைவு.
காலை 10.30 மணி நிலவரம் - திமுக வேட்பாளர்கள் முன்னிலை !
தூத்துக்குடி - கனிமொழி 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
திருபெரும்புதூர் - டி.ஆர்.பாலு 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
நீலகிரி - ஆ.ராசா 11,100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
தஞ்சாவூர் - முரசொலி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் - 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
வேலூர் - கதிர் ஆனந்த் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
திருச்சி - அருண் நேரு 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
திமுக, சிபிஐஎம் வேட்பாளர்கள் முன்னிலை!
மத்திய சென்னையில் போட்டியிட்ட திமுக வேர்பாளர் தயாநிதி மாறன் முதல் சுற்று முடிவில் 10,855 வாக்குகள் பெற்று, 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை!
திண்டுக்கலில் போட்டியிட்ட சிபிஐஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் முதல் சுற்று முடிவில் 13,022 வாக்குகள் பெற்று, 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை!
உபி-யில் இந்தியா கூட்டணி முன்னணி!
உபி-யில் மோடி உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி, பல இடங்களில் இந்தியா கூட்டணி முன்னணி!
பாஜகவின் முக்கிய முகங்கள் பின்னடைவு!
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இராமராக நடித்த அருண் கோவில் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய முகங்கள் தொடர்ந்து பின்னடைவு !
மோடி பின்னடைவு - கலக்கத்தில் பாஜக!
உ.பி வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜ்ய் ராய் 11480 வாக்குகள் பெற்று முன்னிலையில்! 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெறுவார் என கூறப்பட்ட நிலையில், 6000 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவை சந்தித்ததால் பாஜகவினர் அதிர்ச்சி!
மோடி பின்னடைவு!
உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு !
எதிர்த்துப்போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை!
40-லும் இந்தியா கூட்டணி முன்னிலை!
தமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக தலைமயிலான இந்தியா கூட்டணி முன்னிலை !
கார்த்தி சிதம்பரம் முன்னிலை!
சிவகங்கையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை!
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி முன்னணி!
காலை 9 மணி நிலவரப்படி உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 28 தொகுதிகளில் முன்னணி!
பாஜக வேட்பாளர்கள் பெரும் பின்னடைவு!
தமிழ்நாட்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் பெரும் பின்னடைவு. கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் தொடர்ந்து பின்னடைவு!
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி முன்னிலை!
காலை 9 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 38 இடங்களில் முன்னிலை!
மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடக்கம்!
தபால் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடக்கம்.
திமுக முன்னணி வேட்பாளர்கள் முன்னிலை!
தமிழ்நாட்டில் திமுக முன்னணி வேட்பாளர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் ஆகியோர் முன்னிலை!
சுரேஷ் கோபி பின்னடைவு !
கேரளா மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகரும் பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி பின்னடைவு !
சசி தரூர் முன்னிலை !
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் முன்னிலை !
இந்தியா கூட்டணி முன்னிலை!
மக்களவைத் தேர்தல் : கர்நாடகா, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை!
கங்கனா ரனாவத் பின்னடைவு!
இமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் பின்னடைவு!
வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
மக்களவை தேர்தலில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை எண்ண, சென்னை மாநகரில் உள்ள Strong Room ஐ திறந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இன்று வாக்கு எண்ணிக்கை!
நாடே எதிர்நோக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், அதற்கான முழு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
543 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு இயந்திரங்கள், பலத்த
பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை, அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள உலக நாடுகளே ஆர்வம் காட்டும் நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையுடன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?