India
நாட்டையே உலுக்கிய 3000 பெண்களின் ஆபாச வீடியோ வழக்கு : கைதான பிரஜ்வலுக்கு 6 நாட்கள் நீதிமன்ற காவல்!
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி வேட்பாளரும், பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) எம்.பியுமாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. கடந்த மாதம் இவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 3000 பெண்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியானதால் நாடு பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது.
மேலும் பெண்களின் பாதுகாவலர்கள் நாங்கள் என்று சொல்லும் பா.ஜ.க எப்படி, இப்படி ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது? என்ற கேள்வியும் எழுந்தது. இதனிடையே வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரம் காட்டி வந்தது. அதோடு இதற்காக சிறப்பு புலனாய்வு பிரிவு போலிஸார் பல முறை லுக் அவுட் நோட்டீஸ், ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர்.
தொடர்ந்து பிரஜ்வலின் தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் அம்மாநில முதலமைச்சர் கடிதம் எழுதினார். ஆனால் கடிதத்திற்கு சரியாக ஒன்றிய அரசு பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு தீவிர முனைப்பு காட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்புவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று (மே 30) நள்ளிரவு பெங்களூரு விமான நிலையம் வந்த பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக்கு போலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பிறகு அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில், 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு கோரிக்கையும் விடுத்திருந்தது.
இந்த சூழலில் தற்போது ஆபாச வீடியோ வழக்கில் கைதான பாஜக கூட்டணி கட்சி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கு பூதாகரமான நிலையில், அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா மீதும் பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்து அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!