India
வயிறு வலியால் துடித்த இளம்பெண்... பரிசோதனையில் அதிர்ச்சி... 2.5 கிலோ முடி அகற்றம்!
மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகூடில் பகுதியில் 25 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு திடீரென்று கடுமையாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் ஏதோ கட்டி போல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் இருந்து சுமார் 2.5 கிலோ அளவு முடி அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மருத்துவர்கள் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் தனக்கு முடி சாப்பிடும் பழக்கம் உள்ளதாக தெரிவித்தார்.
அதாவது, இந்த பெண்ணுக்கு பல வருடங்களாக முடி சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. தனது முடியை தானே கடித்து தின்று வந்துள்ளார். அது நாளடைவில் அவரது வயிற்றில் தங்கி அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற முடி சாப்பிடுவது ஒரு disorder ஆகும். இந்த disorder உள்ளவர்களை Rapunzel syndrome என்ற trichophagia என்று சொல்லப்படும் மனநல பிரச்னை இருப்பவர்களாக கருதப்படுவர். இவர்கள் முடி, அழுக்கு உள்ளிட்ட உண்ணகூடாதவைகளை உண்ணுவர். இதன் விளைவு இவர்களது உயிர் போககூடிய அளவிற்கு இருக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இது போன்ற சம்பவம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினருக்கும் இந்த disorder இருக்கும். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது என்று பல மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!