India
ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அமித்ஷாவின் வேலை இதுதான் : பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே!
18 ஆவது மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 7 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் இன்றும் ஒரே கட்ட தேர்தல் மட்டுமே உள்ளது. ஜூன் 1 ஆம் தேதி 7 ஆம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த 26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளது. அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் இந்த தேர்தல் மீது அனைவருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், 200 இடங்களில் கூட பா.ஜ.கவால் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாம் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே,"400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.கவினர் கூறுகிறார்கள். அவர்களால் 200 இடங்களில் கூட வெற்றி பெறமுடியாது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் அலை வீசுகிறது.
தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க இல்லை. கர்நாடகாவில் பலமாக இல்லை. மகாராஷ்டிராவில் பலவீனமாக உள்ளது பா.ஜ.க. மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் போட்டி உள்ளது. இப்படி இருக்க எப்படி 400 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும்?.
ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு தனது பதவி பறிபோகும். சொந்த வேலையை பார்க்க வேண்டி இருக்கும் என அமித்ஷா கூறுகிறார். ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அவர்தான் சொந்த வேலை பார்க்க வேண்டி இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
திராவிட மாடலின் ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் 1.8 கோடி பேர் பயன் : அப்பாவு புகழாரம்!
-
“பேரம் பேசக்கூடிய கூட்டணியாக எதிர்க்கட்சி கூட்டணிகள் அமைந்துள்ளது!” : துணை முதலமைச்சர் உதயந்தி கண்டனம்!
-
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா?... பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ஆர்.காந்தி !
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!