India

செயலி மூலம் பெண் ஆசிரியர் போல குரலை மாற்றி பேசி மோசடி : வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிகள் !

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் பிரஜேஷ் குஷ்வாஹா. பெரிய அளவில் படிக்காத இவர் மொபைல்போனை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். அதில் உள்ள மொபைல் செயலியைப் பயன்படுத்தி பெண் ஆசிரியர் போல மாணவிகளிடம் பேசியுள்ளார்.

பெண் பெயரில் தன்னை கல்லூரி ஆசிரியர் என அறிமுகப்படுத்திக்கொண்டு பழங்குடி சமூகத்தை சேர்ந்த மாணவிகளிடம் பேசிவந்துள்ளார். அவர்களிடம் கல்லூரி உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி, தான் அழைக்கும் இடத்துக்கு மாணவிகளை வரவழைத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவர்களை இரு சக்கர வாகனத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் மொபைல்போனை புடுங்கிக்கொண்டு அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதுவரை 7 மாணவிகளை இவர் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அழைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த தகவலின் அடிப்படையில் பிரஜேஷ் குஷ்வாஹாவை போலிஸார் கைது செய்தனர்.

மேலும்,அவரின் கூட்டாளிகள் 3 பெரும் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து 15 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்த 9 பேர் கொண்ட கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாடு அரசின் அசத்தல் நடவடிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்!