India

பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலுக்கு ரூ.80 லட்சம் பாக்கி : ஒரு ஆண்டாக டிமிக்கி கொடுத்து வரும் ஒன்றிய அரசு!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கடந்த ஆண்டு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி மைசூரில் உள்ள நட்சத்திர தனியார் விடுதியில் தங்கினார். பின்னர் பந்திப்பூர் புலிகள் காப்பதற்கு சென்று 20 கிலோ மீட்டர் பிரதமர் மோடி ஜீப் சவாரி செய்தார்.இந்த நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி 3 நாட்கள் தங்கினார். இதற்கான கட்டணம் ரூ.80 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி மூன்று நாட்கள் தங்கியதற்கான விடுதி கட்டணம் ரூ.80 லட்சம் செலுத்தப்படவில்லை என ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், ஜூன் 1-ம் தேதிக்குள் வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்கான செலவு 3 கோடியிலிருந்து 6 கோடி ரூபாய் என நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read: ”ஜெய்... ஜெய்... ஜூம்லானந்தா” : பிரதமர் மோடியை வறுத்தெடுத்த சிலந்தி!