India

”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றுடன் 5 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 46 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பா.ஜ.கவின் இந்துத்வா கொள்ளை வீட்டையே தீ வைத்து கொளித்து விடும் என உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள உத்தவ் தாக்கரே, "பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக மகாராஷ்டிரா வந்த போது எங்களை போலி சிவசேனா என கேலி செய்துள்ளார். உண்மையில் எந்த சிவசேனா போலியானது என்பதை மக்களை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரியவரும்.

சிவசேனா தலைவர் பால்தாக்கரே, நெருக்கடியான நேரத்தில் மோடியின் பின்னால் உறுதியாக நின்றார். அப்போது அதே சிவசேனாவை போலி என்று கூறுகிறார் மோடி. இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் போலி என்று சொல்ல தயங்கமாட்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தற்போதைய பா.ஜ.கவின் கொள்கை பிடிக்குமா?

வீட்டில் அடுப்பை எரிய வைக்க உதவி செய்வதுதான் எங்களின் இந்துத்வா கொள்கை. வீட்டையே தீவைத்து கொளுத்துவதுதான் பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை. பிரதமர் மோடி பால்தாக்ரேவின் இந்துத்வா கொள்கைகளை பின்பற்றவில்லை" என கூறியுள்ளார்.

Also Read: ”இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்” : மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்!