India

”பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது” : சரத்பவார் கடும் விமர்சனம்!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி தொடர்ந்து பிரிவினை கருத்துக்களையே பிரச்சார கூட்டங்களில் பேசி வருகிறார். அண்மையில் கூட ஒன்றிய பட்ஜெட்டில் 15% இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்ய விரும்புவதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து மாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய சரத்பவார், ”சாதி, மதத்தின் அடிப்படையில் ஒன்றிய பட்ஜெட் ஒருபோதும் ஒதுக்கப்படுவதில்லை. அனைத்து மக்களுக்குமானதுதான் பட்ஜெட். ஆனால் இஸ்லாமியர்களுக்கு 15% நிதியை காங்கிரஸ் ஒதுக்கீடு செய்ய விரும்புகிறது என பிரதமர் மோடியின் கருத்து முட்டாள்தனமானது. மோடி பேசுவதில் ஒரு சதவீதம் கூட உண்மை கிடையாது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: மியான்மர் ராணுவ புரட்சிக்கு உதவிய அதானி நிறுவனம் : நார்ஜெஸ் வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு!