India
”பா.ஜ.க ஆட்சி அமைக்க பூஜ்ஜியம் சதவீதம் மட்டுமே வாய்ப்பு” : அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது.
நேற்று ஆந்திரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவுற்றது.
இந்நிலையில், நான்கு கட்டத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சி அமைக்க பூஜ்ஜியம், பூஜ்ஜியம் சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் முழக்கத்தில் எண் 4-ஐ மக்கள் நீக்கி விட்டனர். இரட்டை என்ஜின் பாஜகவின் வெற்றி வாய்ப்பில் இரண்டு பூஜ்ஜியங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
பாஜக ஆட்சி அமைப்பதற்கு பூஜ்ஜியம், பூஜ்ஜியம் சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது. நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தல்களை விடவும், அடுத்து நடைபெற உள்ள மூன்றுகட்ட தேர்தல்களில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக அதிக உற்சாகத்துடன் மக்கள் வாக்களிப்பார்கள்.
மேலும், ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும்போது, எவ்வித கவனச்சிதறலும் இல்லாமல் வாக்குப்பதிவு முடியும் வரை பாஜகவிற்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள். இந்தியா கூட்டணியின் வெற்றியை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!