India
இந்துத்துவ கும்பல் கையில் சிக்கியுள்ள இந்தியா - மீட்க முனைப்பு காட்டும் இந்தியா கூட்டணி!
இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சியை விரும்பிய இந்துத்வாவாதிகள் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை விரட்ட பல்வேறு சூழ்ச்சியை பட்டவர்த்தமாக செய்தனர். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, போராட்டத்தில் இருந்து அவர்களை திசை திருப்பவே இந்தியாவில் “வகுப்புவாத மோதலை” ஆயுதமாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா கும்பல்கள் கையில் எடுத்தது.
அகிம்சையும் ஒன்றுபட்ட இந்தியாவையும் விரும்பிய தேச தந்தை காந்தியை இந்துத்வாவாதிகள் வெறுத்தனர். வெறுப்போடு நின்றுவிடாமல், அவர் மீது குண்டுகளை பாய்ச்சி பழியும் தீர்த்துக்கொண்டனர். மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளியை கொண்டாடுபர்கள் கையிலே இன்றைய இந்தியா சிக்கிறது.
அத்தகைய வழிவந்தவர்கள் மூலம் 2014ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாஜக, தனது இந்துத்வா கொள்கையை வீரியமாக விதைக்க தொடங்கியது. மோடி அரசு மத்தியில் பெரும்பான்மையை கைப்பற்றியதில் இருந்து முஸ்லீம் மீதான வெறுப்பரசியலை வெளிப்படையாகவே காட்ட தொடங்கியது. பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் மதச்சார்ப்பினைக்கு எதிரான கருத்தியலை கட்டமைப்பதே தனது ஆட்சியின் நோக்கமாக கொண்டுள்ளது.
இதில், தொடக்கமாக பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் இஸ்லாமியர் மீதான தாக்குதல் அதீவிரமாக அதிகரித்தது. அதன் அடையாளங்களில் ஒன்றுதான், டெல்லியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 18 முஸ்லிம் தளங்கள் பாஜக உள்ளிட்ட இந்துத்வா கும்பல்களால் சூரையாடப்பட்டது. அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் 100 ஆண்டுகள் பழமையான கரீப் நவாஸ் மசூதி போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாகக் கூறி போலீஸாரின் முயற்சியோடு இடித்து தகர்க்கப்பட்டது.
பாஜகவின் யாத்தரா என்ற ஊர்வலகங்கள் வகுப்பு வாத கலவரங்களை தூண்டவே நடத்தப்படுகிறது. குறிப்பாக ராமநவமி போன்ற ஊர்வலங்களின் போது, இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தி அவர்களின் சொத்துக்கள் மசூதிகளை சூரையாடி அவர்களை நிர்மூலமாக்குவதே அதன் நோக்கமாக இருந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு தொடங்கி பல வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக பார்க்கமுடியும். “பாபரின் பிள்ளைகளே பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்”, நீங்கள் இந்துஸ்தானில் வாழ விரும்பினால் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்ல வேண்டும். பாஜகவின் பல்வேறு கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும், பேரணிகளிலும் நேரடியாகவே இஸ்லாமியர்களைக் கொல்ல அழைப்புவிடுக்கும் முழக்கங்களே அதிகம். பாஜக மதங்களை வைத்து மக்களை பிளவுபடுத்தி அதிகார பலத்தை நிறுவ முயல்கிறது.
“லவ் ஜிஹாத், ஹலால் ஜிஹாத், பொருளாதார ஜிகாத், பிரியாணி ஜிஹாத், மாட்டிறைச்சிக்கு தடை, முஸ்லிம் கடைகளில் பொருள்கள் வாங்கத் தடை, மசூதிகளை இடிக்க வேண்டும், இந்துக்களை சிறுபான்மையினராக்க சதி அரங்கேற்றுகிறார்கள், முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது, பாங்குச் சத்தம் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது, இந்துக்களின் இனப்பெருக்கத்தை தடுக்க சதித்திட்டம் நடக்கிறது” என இஸ்லாமியர்களுக்கு எதிரான நேரடி தாக்குதல் நடத்தும் உத்தியாக இதுபோன்ற அவதூறு பிரச்சாரத்தை பாஜக மற்றும் இந்துத்வா கும்பல்கள் மேற்கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக, தேசவிரோதிகளாக காட்டும் முயற்சியையும் பாஜக தொடர்ச்சியாக செய்து வருகிறது. சமீபத்தில் கூட பேசிய பிரதமர் மோடி, ”வன்முறையாளர்களை அவர்களின் ஆடைகளை வைத்தே அடையாளம் காணலாம்” என்று கூறி இருக்கிறார். அதேவேளையில் மோடி ஆதரவு ஊடங்களும் இத்தகைய கருத்துக்கு இறையாகி மக்கள் மனங்களில் பிரிவினையை விதைக்கிறது.
ஊடகங்கள் ஒருபக்கம் என்றால், சினிமா துறையிலும் இஸ்லாமியர்கள் மீதான வன்மத்தை பரப்ப மோடி ஆதரவு நபர்கள் முயற்சித்து வருகிறார்கள். அந்தவகையில், நாடுமுழுவதும் கடும் கண்டனங்களுக்கு உள்ளான காஷ்மீர் பைல்ஸ், கேரள ஸ்டோரி உள்ளிட்ட படங்களும் அடங்கும். இத்தகைய படங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வரிசலுகை அளிக்கப்பட்ட கொடுமை எல்லாம் அரங்கேறியது. இவையெல்லாம் தேர்தலுக்கு முன்பு நடந்தது.
நாடு முழுவதும் இளைஞர் மீது நடத்தப்பட்ட வேலையின்மை என்றும் தாக்குதல், பொருளாதார தோல்வியால் வறுமை என்றும் ஏழைகள் மீது நடந்த தாக்குதல், பிரிவினையை உருவாக்கி மத சாதி பாகுபாடளை உண்டாக்கியது, பெண்கள் மீது நடக்கும் வன்முறை, சிறுபான்மையினர் மீதான நடக்கும் வன்முறை, இட ஒதுக்கீடு மீது தொடுக்கப்படும் தாக்குதல் என இந்தியாவே நிலைகுலைந்து இப்போது உள்ளது. இதனால் தோல்வி பயத்தில் இருக்கும் பாஜக, இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அவதூறு கருத்துகளை பரப்பி வந்த நிலையில், மக்களை பிளவுப்படுத்தும் வெறுப்பு பிரச்சாரங்களை கையாளுகிறது. அந்தவகையில் மதச்சார்பின்மையை பற்றி பேச வேண்டிய பிரதமரே, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துகளை பேசி வருகிறார். இந்துக்களின் சொத்துகளை பறித்து விடுவார்கள், இந்து பெண்களின் தாலியை அபகரித்து விடுவார்கள், உயிர் இருக்குவரை பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களிடம் பறித்துக்கொடுப்பதை அனுமதிக்க மாட்டேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
இந்தியா முழுவதும் சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல் வெறும் வெறுப்பு அல்ல, அது சிறுபான்மையினரின் பண்பாட்டின் மீது தொடுக்கப்படும் வன்முறையாகும். சிறுபான்மையினரை பாதுகாக்கும், இந்தியாவின் அடையாளமாகவும் இருக்கும் பன்முகத்தன்மையை, மதச்சார்பின்னையை சிதைப்பதையும் பாஜக முழுக்குறிக்கோளாக கொண்டுள்ளது, இந்தியாவின் பன்முகத்தன்மையை, மதச்சார்பின்னையை சிதைப்பதன் மூலம் இந்தியா இந்துக்களின் நாடாக மாறும் என்ற அஜண்டாவோடு தேர்தலை சந்திக்கிறது. அதனால் இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வதிகாரத்திற்கும் இடையே நடக்கும் போர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். வெறும் அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் அல்ல, இது பண்பாட்டின் நீட்சியை காப்பாற்றும் தேர்தல் ஆகும் என்று ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
இந்தியா புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க தயாராகி வருகிறது. மோடி ஆட்சியில் சீரழிவுகளை சரிசெய்ய இந்தியா கூட்டணி களம் காண்கிறது. வெறும் தேர்தல் உத்தியாக மட்டுமல்லாமல் கருத்தியல் ரீதியாகவும் அணி திரண்டுள்ள இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 26க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்திருக்கிறது. பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. இது கட்சி இயக்கங்களின் ஆதரவை தாண்டி, நாட்டு மக்களின் ஆதரவை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியின் வெற்றிதான் இந்தியாவின் வெற்றி என்பதை நாடு உணர்ந்திருக்கிறது, அதை ஜூன் 4ல் வெளியாகும் தேர்தல் முடிவுகள் வெளிப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!