India
”மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் கிடையாது” : கபில் சிபல் பேச்சு!
18 ஆவது மக்களவை தொகுதி 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மக்களை தேர்தலில் 10 ஆண்டுக்கால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தும் ஒரே கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கித் தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
இந்த இந்தியா கூட்டணி உருவானதிலிருந்தே பா.ஜ.கவின் தோல்வி தொடங்கிவிட்டது. தற்போது நடந்து முடிந்துள்ள மூன்று கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகளும் பா.ஜ.கவின் தோல்வியை உறுதிப்படுத்தி வருவதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
தோல்வி பயம் காரணமாகத்தான் 10 ஆண்டு சாதனைகளை எதுவும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில் பேசாமல், மக்கள் மத்தியில் மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.
மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தம்மிடம் இருக்கும் சொத்துக்களை பிடுங்கி இஸ்லாமியர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்று ஒரு நாட்டின் பிரதமரே மத வெறுப்புணர்வுடன் பேசுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் மதவெறுப்பு பேச்சுக்குத் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவிக்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் அமைதியாக இருந்து வருகிறது.
இதனால் பிரதமர் மோடி தொடர்ந்து வெறுப்பு பேச்சுகளையே தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வருகிறார். தற்போது, ராமல் கோவிலுக்கு பாபர் மசூதி பூட்டை காங்கிரஸ் போடாமல் இருக்க 400 தொகுதிகளில் பா.ஜ.கவை வெற்றி பெற செய்யுங்கள் என மோடி பேசியுள்ளார்.
இந்த வெறுப்பு பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,ராமல் கோவிலுக்கு பாபர் மசூதி பூட்டை காங்கிரஸ் போடாமல் இருக்க 400 தொகுதிகளில் பா.ஜ.கவை வெற்றி பெற செய்யுங்கள் என மோடி பேசியுள்ளார். பாபர் மசூதி பூட்டை ராமர் கோவிலுக்கு போட முடியுமா? எப்படி இது நடக்கும், இது போன்ற பேச்சுகளுக்குத் தேர்தல் ஆணையம் பூட்டு போட முடியும். ஆனால் செய்யாது. தேர்தல் ஆணையத்துக்குத் தைரியம் கிடையாது. ஏனெனில் அவர்களும் மோடிக்குத்தான் வேலை பார்க்கிறார்கள்.” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!