India
தேர்வுத்தாளில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என எழுதிய மாணவர்களுக்கு 56% மதிப்பெண் : உ.பி-யில் வெளிவந்த பல்கலை. மோசடி!
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
மறுபக்கம் இந்துத்துவ அமைப்புகளை வலுப்படுத்தி அதன் மூலம் நாட்டை மதத்தீவிரவாதிகளிடம் அளிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி அரசின் பல்வேறு அமைப்புகளில் இந்துத்துவவாதிகளை நுழைக்கும் திட்டத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளில் இந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள் பொறுப்பில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்வுத்தாளில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என எழுதிய மாணவர்களுக்கு 56% மதிப்பெண் அளித்த ஆசிரியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைகழகம் அமைந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வு முடிவுகளில் குளறுபடி நடந்ததாக முன்னாள் மாணவர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் நான்கு மாணவர்களின் விடைத்தாள் மாதிரி அளிக்கப்பட்டது. அதில் அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்றும், கிரிக்கெட் வீரர்களின் பெயரையும் விடைத்தாளில் எழுதியிருந்தனர். ஆனால், அந்த விடைதாள்களுக்கு 56 % மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் புகார் அளிக்கப்பட அந்த மாணவர்களின் விடைத்தாள்களை மீண்டும் மதிப்பிடப்பட்டதில் அனைவர்க்கும் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இது குறித்து மாநில ஆளுநருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பணம் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதாக இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!