India

மன்னிப்பு கேட்டு பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம் : என்ன காரணம்?

அலோபதி மருத்துவத்தை அவதூறு செய்யும் வகையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டதாக கூறி இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பதஞ்சலி நிறுவனத்தின் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும், ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை வேண்டுமென்றே மதிக்கவில்லை என்று கூறி ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தவறான விளம்பரத்தை வெளியிட்டதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றும் ராம்தேவ் உறுதியளித்தார். நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றத்தை பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, ராம்தேவ், பாலகிருஷ்ணா, பதஞ்சலி நிறுவனம் சார்பில் பொது மன்னிப்பு கோரி பகிரங்க அறிக்கை வெளியிட ஒருவார கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மக்களிடம் பொதுமன்னிப்பு கோரி விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

Also Read: ”பிரதமர் மோடியின் கீழ்த்தரமான பேச்சு” : நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்!