India

”அரசியல் சாசனத்திற்கு ஆபத்து என்பது அனைவரது உயிருக்கும் ஆபத்தாகும்” : முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை!

10 வருடங்களில் பிரதமராக இருந்த மோடி ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றினாரா? என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள மடிகேரி பகுதியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சித்தராமையா, "இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அரசியலமைப்பைக் காப்பாற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

பாஜக அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கு பா.ஜ.க சதி செய்கிறது. இதை ஒன்றிய அமைச்சர் வெளிப்படையாகக் கூறுகிறார்கள். அரசியல் சாசனத்திற்கு ஆபத்து என்பது பெண்கள், ஏழைகள், நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் என அனைவரது உயிருக்கும் எதிர்காலத்திற்கும் ஆபத்தாகும்.

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் ஏன் பங்கேற்கவில்லை?. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஒருபோதும் தேசப்பற்று கிடையாது. 10 வருடங்களில் பிரதமராக இருந்த மோடி ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றினாரா?. இதை இவர் தனது கைகளை இயத்தின் மேல் வைத்துச் சொல்லட்டும்.

இந்தியர்களைத் தவறாக வழிநடத்தும் மற்றும் தூண்டும் ஒருவருக்கு வாக்களித்தால் உங்கள் வாக்குக்கு மதிப்பு கிடைக்குமா? மாநிலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் வாழ்க்கைக்குப் பதில் அளித்தவர்களுக்கு வாக்களித்தால் உங்கள் வாக்குகளுக்கு மதிப்பு கிடைக்காதா?. எனவே நீங்கப் புத்திசாலித்தனமாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: GSTயை சொல்லி பா.ஜ.கவால் வாக்கு கேட்க முடியுமா? : கமலஹாசன் கேள்வி!