India
"உளவு பார்க்கும் இணைய தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது" - ஐபோன் பயனாளிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை !
கடந்த 2021-ம் ஆண்டு இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவன பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
மேலும் இந்த பட்டியலில் பல சமூக செயற்பாட்டாளர்களின் எண்களும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் செல்போன் தரவுகளும் வேவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த ஒட்டுக்கேட்பு விவகாரம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து ஒன்றிய அரசு அப்போது எந்த பதிலும் அளிக்கவில்லை. அதன் பின்னர் கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பிக்களின் ஆப்பிள் போன்களுக்கு அரசாங்க ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் உங்கள் செல்போனை ஹேக்கிங் செய்ய முயற்சி நடைபெறலாம் என்று கூறி அலர்ட் வந்தது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர், திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா போன்ற முக்கிய எதிர்கட்சி தலைவர்களுக்கு இதுபோன்ற அலர்ட் வந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உளவு பார்க்கும் இணைய தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளதாக ஐ போன் பயன்படுத்துவோருக்கு ஆப்பிள் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ போன் பயன்படுத்துவோருக்கு இன்று அதிகாலை 12.30 மணி அளவில் இமெயில் மூலம் ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.
அதில், உங்கள் ஐபோன் இணைய தாக்குதலுக்கு குறிவைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் யார் என்ன செய்கிறீர்கள் என்ற என்பதை கண்டறிய இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தீவிரமாக கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. தெரியாத நபர்களிடமிருந்து திடீரென்று வரக்கூடிய லிங்க் எதையும் திறக்க முயற்சிக்க கூடாது என்றும் ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. மீண்டும் தேர்தல் காலந்த்தில் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ள நிலையில், அது அரசியல் நோக்கத்துக்காக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!