India
புதுமுகங்களை கொண்டு, ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம் என தப்புக்கணக்கு போடும் மோடி அரசு!
10 ஆண்டுகளுக்கு பிறகு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்திற்கான தேவை அதிகரித்தமையால், தேர்தல் பணிகளும் வெகுவாக அதிகரிக்கத்துள்ளன.
இடையிடையே, தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பான செயல்கள் அரங்கேறினாலும், விதிமுறை மீறல்களில் ஆளும் பா.ஜ.க.வின் நிர்வாகிகள் தொடர்பு கொண்டுள்ளதால், அதில் தேர்தல் ஆணையம் தலையிட மறுத்து வருகிறது.
இவ்வாறான சூழலில், மற்ற தேசிய, மாநில கட்சிகளை முந்திக்கொண்டு தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டு வரும் பா.ஜ.க, கட்சிக்குள்ளேயே பல்வேறு தருக்கங்களை சந்திக்க நேர்ந்துள்ளது.
காரணம், அடுத்த தலைமுறைக்கு வழிவிடுகிறோம் என்று வேட்பாளர் பட்டியல் தேர்ந்தெடுப்பில், பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும் சரி, கட்சியின் மூத்த தலைவராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, 90 க்கும் மேற்பட்ட புது முகங்களை அறிமுகப்படுத்தியதே.
ஆனால், உண்மை காரணம் என்னவோ, நடப்பு பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள அதிருப்தி தான்.
ஒருவேளை அவர்கள் சொல்லுவது போல, அடுத்த தலைமுறைக்கு வழிவிடுகிறதாய் இருந்தால், தமிழ்நாட்டில் 72 வயதான பொன். இராதாகிருஷ்ணன், 82 வயதான பாரிவேந்தர், வடக்கில் 73 வயதான மோடி, 72 வயதான ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர், ஏன் மீண்டும் வேட்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க போகிறார்கள்.
காரணம், இவர்கள் எல்லாம், மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள்.
எனினும், பல்வேறு புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது நல்லது தானே, என்றால் அதுவுமில்லை. புது முகங்களாக அறிமுகப்படுத்தப்படுபவர்களும், மக்களுக்கு புது முகங்கள் இல்லை. அவர்கள் ஒன்று, அரசு பதவியில் இருந்துகொண்டு பா.ஜ.க.விற்கு உதவியிருக்க வேண்டும். அல்லது சினிமா உள்ளிட்ட புகழ்மிக்க துறைகளில் இருந்து கொண்டு பா.ஜ.க.விற்கு ஆதரவு கொடி பறக்கவிட்டிருக்க வேண்டும்.
அப்புது முகங்களுக்கு அரசியல் தெளிவு இருக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான், நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் IPS அதிகாரி தேபாஷிஷ் தார் போன்றோர். இதில், முன்னாள் IPS அதிகாரியும், தற்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் அடக்கம் தான். அவரும் முதல் முறை வேட்பாளர் தான்.
இத்தகைய எண்ணற்ற உத்திகளை பயன்படுத்தினாலும், பா.ஜ.க.வின் உண்மை தன்மை அவ்வப்போது வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அவ்வாறு வெளிப்படுவது தான், அண்ணாமலையின் வெறுக்கத்தக்க பேச்சுகளும், உளறல்களும்.
அவரின் வறுக்கத்தக்க பேச்சுகளாக கருதப்படுவது, இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த அவரது எதிர்மறை கருத்து, பெரியார் மீது அவர் வைத்துள்ள வெறுப்பு ஆகியவை.
மதத்தின் பெயராலும், சாதிய நடைமுறையாலும், ஆதிக்க போக்காலும் தமிழ்நாட்டில் காலூன்ற இயலாது என்று அறிந்தும் நில நேரங்களில் பா.ஜ.க.வினர் வெளிப்படுத்தும் அரசியல் சாயங்கள், அவர்களின் மீது மக்கள் வைத்துள்ள எதிர்மறை நிலைப்பாட்டை மாற்ற இயலாமல் தக்கவைக்க உதவத்தான் செய்கிறது.
ஆக, அவர்களை அவர்களாக இருக்க விட்டாலே, அவர்களின் அதிகாரம் மண்ணில் துவண்டு போகும் என்பதும், இதன் வழி நாளுக்கு நாள் தெளிவடைந்து தான் வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!