India

”மோடி கியாரண்டிகளின் லட்சணம் இதுதான்” : போட்டுடைத்த திரிணாமூல் காங்கிரஸ்!

இந்தியாவில் 2014ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.417 ஆக இருந்தது. ஆனால் படிப்படியாக ரூ.1118 ஆக உயர்ந்து. இந்த விண்ணை முட்டும் விலை உயர்வால் குடும்பத் தலைவிகள் கடும் அவதிகளைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த கடும் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. அப்போது எல்லாம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என மோடி அரசு கூறியது. பின்னர் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் கூட சிலிண்டர் விலையை மோடி அரசு குறைக்கவில்லை.

தற்போது தேர்தல் நெருங்கிய உடன் மகளிர் தினத்தில் சிலண்டர் விலையை மோடி குறைத்துள்ளார். அப்போது கூட இவர்கள் ஆட்சிக்கு வந்த போது இருந்த ரூ.417க்கு சிலிண்டர் விலை ஒன்றும் இப்போது இல்லை. நன்றாக விலையை உயர்த்தி விட்டு தற்போது குறைத்து விட்டதாக நாடகம் ஆடுகிறது பா.ஜ.க.

இந்நிலையில், மக்கள் ஒன்றும் முட்டால் அல்ல என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சாகெத் கோகலே விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஜனவரி 2020 வரை சிலிண்டரின் விலை ரூ.714. மக்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. எனவே சிலிண்டர் விலை ரூ.514 ஆக இருந்தது.

இப்போது சிலிண்டரின் விலை ரூ.1103. 200 ரூபாய் மானியம் சத்தமின்றி நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே ஜனவரி 2020-லிருந்து நீங்கள் சிலிண்டருக்கு இரட்டிப்பு விலையைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.இதுதான் ‘மோடி கியாரண்டி’களின் லட்சணம். மக்களை முட்டாளாக்கி பிறகு திருட்டுத்தனமான முடிவுகளை எடுத்து அவற்றைக் குறித்து வாய்கூசாமல் பொய் பேசுவதுதான் மோடி அரசாங்கத்தின் இயல்பு” என தெரிவித்துள்ளார்.

Also Read: காவல்நிலையத்தில் புகுந்து போலிஸாரை மிரட்டிய பா.ஜ.க அமைச்சர் : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!