India
RSS நிர்வாகி வீட்டில் 770 கிலோ வெடிப்பொருட்கள்... : போலிஸார் சோதனையில் ஷாக் - கேரளாவில் பரபரப்பு !
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெற்று விட கூடாது என்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேரளாவில் போலீசார் நடவடிக்கையின்போது, சுமார் 770 கிலோ மதிப்புள்ள வெடிபொருட்களை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் இருந்து மீட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே அமைந்துள்ள கொளவெல்லூரில் உள்ள போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று உள்ளூர் RSS நிர்வாகியான வடக்கயில் பிரமோத் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சுமார் 770 கிலோ மதிப்புள்ள வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கொளவள்ளூர் காவல் ஆய்வாளர் சுமீத் குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சோபின் ஆகியோர் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் RSS நிர்வாகியின் குட்டு வெளியானது. இதன் முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் அனைத்தும் சட்டவிரோதமாக விநியோகிப்பதற்கு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் போலீசார் மேலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தலைமறைவாக இருக்கும் RSS நிர்வாகியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!