India
”உங்களிடம் வேலைவாய்ப்புக்கான திட்டம் உள்ளதா?” : பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறி ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. ஆனால் 10 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் இளைஞர்களுக்காகக் கொடுத்த வாக்குறுதியில் 10%ம் கூட நிறைவேற்றவில்லை.
வீதிக்கு வீதி வேலை இல்லாமல் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் இளைஞர்களைப் பற்றி ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கொஞ்சம் கூட அக்கறை இல்லை. அவர்கள் மனதில் வெறுப்பை வளர்க்கப் பார்க்கிறதே தவிர, அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பினை உருவாக்கித்தர மறுக்கிறது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் வந்து விட்டதால் மீண்டும் பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வாயால் வடைசுட்டு வருகிறார். இந்நிலையில் உங்களிடம் வேலைவாய்ப்புக்கான திட்டம் உள்ளதா? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "நரேந்திர மோடி அவர்களே உங்களிடம் வேலைவாய்ப்புக்கான திட்டம் ஏதேனும் உள்ளதா?. இந்தக் கேள்வி இன்று ஒவ்வொரு இளைஞர்களின் உதடுகளும் கேட்கிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலை தருவதாகப் பொய் சொல்லப்பட்டது ஏன்?
Yuva Nyayன் கீழ் வேலைவாய்ப்பு புரட்சிக்குக் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். படித்த ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
இரண்டு சித்தாந்தங்களின் கொள்கைகளுக்கு இடையிலான வேறுபாட்டை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது. இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்கக் காங்கிரஸ் விரும்புகிறது, பாஜக அவர்களைத் தவறாக வழிநடத்த விரும்புகிறது. மாயையின் வலையை உடைத்து இளைஞர்கள் தங்கள் கைகளால் தங்கள் விதியை மாற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!