India

வடக்கில் ஒரு பேச்சு! தெற்கில் ஒரு பேச்சு! : தேர்தல் நேரத்தில், பா.ஜ.க. முன்னெடுக்கும் இரட்டை உத்திகள்!

பா.ஜ.க என்றால் நினைவிற்கு வருவது, அதன் முன்னோடியான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் என்றால் நினைவிற்கு வருவது, அது முன்னெடுக்கும் இந்துத்துவ கொள்கை, ஆதிக்க உணர்வு, வகுப்புவாதம் ஆகியவை.

எனினும், அரசியல் காரணங்களுக்காகவும், ஆட்சி மாயை காரணத்திற்காகவும், தங்களது கோட்பாடுகளை தளர்வு படுத்துவது போல காட்சிப்படுத்த முன் வந்திருக்கின்றன பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்-ம்.

இந்தி மொழி மாநிலங்களில், சனாதனம் என்ற மாயைக் கொண்டு ஓட்டு கேட்கும் பா.ஜ.க.விற்கு, நேர் எதிரான சமத்துவ மனநிலையை தமிழ்நாடு மக்களும், அண்டை மாநில மக்களும் கொண்டுள்ளது, ஒன்றிய பா.ஜ.க.விற்கு கடும் சவாலாகவே இருக்கிறது.

அதன் காரணமாக, இந்துத்துவ, வகுப்புவாத கூற்றுகளை அரசியல் பிரச்சாரமாக்காமல், முற்காலத்தில் விமர்சித்து வந்த அ.தி.மு.க தலைவர்களை, தலையில் தூக்கி வைத்து பேசுகிறார் பிரதமர் மோடி.

அவருக்கு அடுத்த நிலையில், மாநில பா.ஜ.க.வின் தலைவர்களும், வடக்கில் கூறுவதற்கு ஏற்ப தலையசைத்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் அசைக்க முடியாத தலைவராக விளங்கும் பெரியார், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைக்கு எதிரானவர் என்ற போதிலும், பெரியார் பெயர் சொல்ல தயங்கி வருகின்றனர் பா.ஜ.க.வினர்.

இவ்வகை செயல்களால், தமிழ்நாட்டு மக்களின் மனங்களை கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க, இது பெரியார் மண், அறிஞர் அண்ணா மண், முத்தமிழறிஞர் கலைஞர் மண் என்பதன் பொருளை விரைவில் உணரும்.

இதே மனநிலையில் தான் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரத்தை சேர்ந்த மக்களும் கொண்டுள்ளனர் என்பதற்கு பல உதாரணங்கள் வரிசைக்கட்டி இருக்கின்றன.

எனினும், இதுவரை கேரளத்தில் ஒரு தொகுதியில் கூட வென்றிடாத பா.ஜ.க, எதிர்வரும் தேர்தலில் இரட்டை எண்ணிக்கையில் வெற்றியடைவோம் என கூறி, கனவுலகில் மிதந்து வருகிறது.

இவ்வாறான பொய் பரப்பல்களுக்கு செவி சாய்க்காமல், வகுப்புவாதம் தான் பா.ஜ.க.வின் குறிக்கோள்! அதனை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம்! என மக்கள் உணர்த்தும் காலம், நினைப்பதை விட அருகாமையில் உள்ளது.

Also Read: மணிப்பூரில் அரங்கேறும் உரிமைமீறல் : சிறும்பான்மையினரின் கருத்துகளை கேட்காமல் நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!