India
மோடிக்காக உண்மையை மறைக்கப் பார்க்கும் SBI : முகத்திரையை கிழித்த ஜெய்ராம் ரமேஷ்!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர நடைமுறை அண்மையில் உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. மேலும் 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும் நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே இரு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ வங்கி ஜூன் மாதம் வரையில் அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ள பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இந்த விவரங்களை வெளியிடுவதிலிருந்து தவிர்க்கவே எஸ்.பி.ஐ இதுபோன்ற கோரிக்கையை எழுப்பியுள்ளதாக இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் SBIக்கு அடுக்கடுக்காக கேள்விகளைக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியுள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள் இரண்டு நிபந்தனைகளுடன் விற்கப்பட்டது. ஒன்று வாங்குபவரை அடையாளம் காண SBI கிளைகள் மூலம் உங்கள் வாடிக்கையாளரை விரிவாக அறிந்து கொள்ள முடியும். இரண்டாவது பத்திரங்களில் மறைக்கப்பட்ட வரிசை எண்கள். இந்த நிபந்தனைகள் படிதான் தேர்தல் பத்திரம் விற்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது.
எனவே நன்கொடையாளர்கள் மற்றும் நிதி பெற்ற அரசியல் கட்சிகளின் தரவுகள் SBI யிடம் உறுதியாக இருக்கும். நிதி அமைச்சகம் 2017 இல் "வாங்குபவரின் பதிவுகள் எப்போதும் வங்கியில் கிடைக்கும் மற்றும் அமலாக்க முகமைகளால் தேவைப்படும்போது மீட்டெடுக்கப்படலாம் என்று பதிவு செய்திருந்தது. இப்போதும் அதற்கும் இடையில் என்ன மாறிவிட்டது?
2018 ஆம் ஆண்டு காலாவதியான சில தேர்தல் பத்திரங்களை ஒரு அரசியல் கட்சி முயன்றபோது, SBI நிதி அமைச்சகத்திடம் அனுமதி பெற்று, இந்தப் பத்திரங்களைப் பணமாக்குவதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுத்தது. மிகக் குறுகிய கால அளவில், இந்த காலாவதியான பத்திரங்களை வாங்கிய எண் மற்றும் தேதியை வங்கியால் அடையாளம் காண முடிந்தது. அப்படி இருக்கும் போது இப்போது மட்டும் கால அவகாசம் கேட்பது எப்படி?
உண்மை என்னவென்றால், தனது நிறுவன நன்கொடையாளர்களை இந்திய மக்களுக்கு வெளிப்படுத்துவதில் பிரதமர் முற்றிலும் பயப்படுகிறார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!