India
“இந்திய மக்கள் நல்லவர்கள். ஆனால்...” - வன்கொடுமைக்கு உள்ளான வெளிநாட்டு பெண் உருக்கம் !
இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்களுக்கு சிலர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வருகின்றனர். தற்போது ஜார்கண்டிலும் அதே போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஸ்பெயினை சேர்ந்த தம்பதி இரு சக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றி பார்க்க எண்ணியுள்ளனர்.
அதன்படி பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மார்ச் 1-ம் தேதி இவர்கள் ஜார்க்கண்டின் தும்கா காட்டில் கூடாரம் அமைத்து தம்பதி தங்கியிருந்தனர். அப்போது இரவு நேரத்தில் அங்கே வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், தம்பதியை தாக்கியுள்ளனர். மேலும் கணவரை அடித்து இழுத்து, மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர். அதோடு அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட உபகரணங்களையும் திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டதையடுத்தே இந்த விவகாரம் பூதாகரமானது. இதைத்தொடர்ந்து பிரேசில் தூதகம் இந்த சம்பவத்தில் தலையிட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், உடனடியாக குற்றாவாளிகளான 3 இளைஞர்களை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் 4 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார். இந்த நிலையில், மீண்டும் தனது கணவருடன் சுற்றுலா பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த வகையில் நேற்று பீகார் வழியாக நேபாளம் புறப்பட்டு சென்றனர்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “பைக்கில் நானும் என் கனவரும் பல நாடுகளுக்கு சென்றுள்ளோம். கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். சுமார் ரூ.20 ஆயிரம் கி.மீ வரை பயணித்துள்ளோம். இந்தியாவில் எங்களுக்கு நல்ல நினைவுகள் உள்ளன. இந்திய மக்கள் மிகவும் நல்லவர்கள்; எங்களை நல்லபடியாக கவனித்துக் கொண்டனர்.
சில கிரிமினல்களை மட்டுமே நான் குற்றம்சாட்டுகிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்னதாக நடந்ததே இல்லை. முதல் முறையாக இது நடந்துள்ளது.பெண்கள் இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ள பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் எங்களுக்கு நல்ல நினைவுகள் இருக்கிறது. எனது கணவருடன் மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடர்வேன்” என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!