India
30 நிறுவனங்கள் - ரூ.335 கோடி நன்கொடை : பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்!
ஒன்றிய பா.ஜ.க அரசு ED, CBI மற்றும் IT போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களை மிரட்டி வருகிறது. அம்மாநிலங்களில் அமைச்சர்கள் மீது போலியான வழக்குகளை தொடர்ந்து ஆட்சியை கவிழ்க்கும் சதிதிட்டங்களை தீட்டி வருகிறது.
இந்நிலையில் இதே ED, CBI மற்றும் IT போன்ற விசாரணை அமைப்புகளைவைத்து பெரிய பெரிய நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.க நன்கொடை பெற்று வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "2018 முதல் 2022 வரை 30 நிறுவனங்களிடம் ED, CBI மற்றும் IT போன்ற விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியுள்ளன. இதையடுத்து இந்த நிறுவனங்கள் ரூ.335 கோடி நிதியை பா.ஜ.கவுக்கு வழங்கியுள்ளன.
2018 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த நிறுவனங்கள் பா.ஜ.கவுக்கு எந்த நன்கொடையும் வழங்கவில்லை. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா.ஜ.க கட்சியின் நிதி குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா?. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது.
சந்தேகத்திற்குரிய நன்கொடை குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பு விசாரணைக்கு உங்களை முன்வைக்க நீங்கள் தயாரா?" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!