India
”எங்களுக்கு நிதிஷ்குமார் தேவையில்லை” : பீகாரில் ராகுல் காந்தி அதிரடி பேச்சு!
பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியமைத்தது. இந்த தேர்ததில் நிதிஷ் குமாரின் கட்சி வெறும் 43 இடங்களை மட்டுமே பெற்றது. அதே நேரத்தில் பா.ஜ.க 78 இடங்களில் வெற்றி பெற்றது.
இதனால் கூட்டணியில் இருந்தாலும் பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ் குமார் அறிவித்து, பீகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். இந்த கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வியும் பதவியேற்றனர்.
தற்போது பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், அதில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் முக்கியமாக திகழ்கிறார். அண்மையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கூட நிதிஷ் குமார் கலந்து கொண்டார். ஆனால் தற்போது மீண்டும் பாஜகவுடன் இணைந்துள்ளார் நிதிஷ் குமார். இது அவர் மீதான நன்பகத்தன்மையை இழந்துள்ளது.
இந்நிலையில் எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை என ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். பீகாரில் இந்திய நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி எம்.பி, "தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாட்டின் அனைத்து துறையிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. பீகாரில் சமூக நீதிக்காக மகா கூட்டணி தொடர்ந்து போராடும். அதற்கு எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?