India
ஒன்றிய அரசு துறைகளில் 1500 தனியார் அதிகாரிகள் : RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்று வருகிறது. தற்போது ஒன்றிய அரசு துறைகளில் தனியார் அதிகாரிகளை ஆலோசகர்களாக நியமித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ernst & Young, PWC, Deloitte, KPMG ஆகிய நான்கு தனியார் நிறுவனங்களை சேர்ந்த 1499 நபர்களை ஒன்றிய அரசு ஆலோசகர்களாக நியமித்துள்ளது. இதற்கா ஆண்டுக்கு ரூ.302 கோடி செலவிட்டு வருவது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக சுகாதாரம், ஊரக வளர்ச்சி, விவசாயம், வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சி, பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி, சாலை போக்குவரத்து ஆகிய துறைகளில் தனியார் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதேபோல், நிதி ஆயோக், வர்த்தகம், விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் தனியார் அதிகாரிகளை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இவர்களுக்கு ரூ.50000 முதல் ரூ.75000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இது தவிர பல தனிநபர்கள் ஆலோசர்களாகவும், நிபுணர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்த நியமங்களைத் தவிர, 1481 ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், 20,376 கீழ்நிலை ஊழியர்கள் ஆகியோரும் 76 துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு செலவிடும் தொகை வெளியிடப்பட்டவில்லை.
ஒன்றிய அரசு குரூப்-டி பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்த பிறகு முழுமையாக ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமனம் நடத்தப்படுகிறது. அந்த பணிகளுக்கு 76 துறைகளில் 20,376 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருப்பது RTI மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?