India

24 மணி நேரமும் சேவலுக்கு போலிஸ் பாதுகாப்பு : பஞ்சாப்பில் நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் பல்லுவானா என்ற ஒரு கிராமம் உள்ளது. இங்கு அடிக்கடி தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சேவல் சண்டை நடப்பதாக போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போலிஸார் வருவதை அறிந்து கொண்ட அங்கிருந்தவர்கள் சேவல்களை அப்படியே விட்டு விட்டு பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடிவிட்டர்.

பின்னர் போலிஸார் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரை பிடித்தனர். மேலும் அங்கிருந்த இரண்டு சேவல்களை மீட்டனர். பிறகு இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக சேவல் முக்கிய ஆதாரமாக உள்ளதால் அவற்றை போலிஸார் தங்களது பாதுகாப்பில் வைத்துப் பராமரித்து வருகின்றனர்.

மேலும் கால்நடைகளைப் பராமரிக்கும் ஒருவரிடம் சேவல்களைக் கொடுத்து அவற்றைப் பாதுகாத்து வருகிறார்கள். தினமும் அங்கு சென்று போலிஸார் சேவல் எப்படி இருக்கிறது என்று கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: திரையுலகில் மேலும் ஒரு சோகம்... பிரபல பாடகி பவதாரிணி காலமானார்... பிரபலங்கள் இரங்கல் !