India
“இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடிக்க யார் உரிமை கொடுத்தார்கள்?” - குஜராத் போலிஸுக்கு நீதிமன்றம் கேள்வி !
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாஜக நீண்ட நாள் ஆண்டுவரும் மாநிலமும், மோடியின் சொந்தமாநிலமுமாக குஜராத்தில் கடந்த ஆண்டு நடந்த கொடூர சம்பவம் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள உந்தேலா கிராமத்தில் மூன்று இளைஞர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கல் எறிந்ததாக கூறி, அவர்கள் மூன்று பேரையும் பொதுவெளியில் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் லத்தியைக் கொண்டு அடிப்பது சித்திரவதையாகாது என்றும், தாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் சம்பவத்தில் ஈடுபட்ட போலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தது சர்ச்சையானது.
இந்த சூழலில் இந்த வழக்கில் போலீசாரின் குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் குற்றவாளிகளான 4 போலீசாருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, அவர்களுக்கு 14 நாட்கள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்த 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று மீண்டும் உச்சநீதிமன்றம் குஜராத் போலீசுக்கு கேள்வி எழுப்பியது.
அதில் பொதுவெளியில் கட்டிவைத்து போலிசாரால் தாக்கியது என்ன மாதிரியான அடக்குமுறை?, கட்டி வைத்து அடிக்க உங்களுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் உள்ளதா?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ”இதெல்லாம் என்ன கொடுமை? மக்களை கம்பத்தில் கட்டி வைத்து, பொது மக்கள் பார்வையில் அடித்து, வீடியோ எடுப்பது. அப்படியானால் இந்த நீதிமன்றம் தலையிட வேண்டும்” என்று கூறி இது குறித்த விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!