India
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோ : முக்கிய குற்றவாளி கைது - நடந்தது என்ன?
உலகம் முழுவதும் Artificial Inteligence தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்தது.
அதோடு ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற "காவலா.." பாடலுக்கு காஜல், சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் நடனமாடுவது போல் AI-ஐ பயன்படுத்தி வீடியோக்களும் வெளியானது. இதனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆச்சயர்த்துடன் கண்டு ரசித்தாலும், மற்ற சிலர் அதற்கு எதிராகக் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கு காரணம், சில நாட்களுக்கு முன்னர், நடிகை ராஷ்மிகாவின் AI தொழில்நுட்ப வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் வேறு ஒரு பெண்ணின் முகத்தில் ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி அவர் பிகினி ஆடையில் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதே போல பல்வேறு நடிகைகளின் Deep fake வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினின் Deep fake வீடியோ வைரலானது. அதில், தனது மகள் சாரா ஆன்லைன் வீடியோ கேம் மூலம் பல பணத்தை சம்பாதித்து வருவதாகவும், இதனை ரசிகர்கள் நீங்களும் பயன்படுத்தி சம்பாதிக்கலாம் என சச்சின் கூறுவது போல வீடியோ இடம்பெற்றிருந்தது.
இப்படி நடிகைகள், பிரபலங்கள் என குறித்த Deep fake வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோவை வெளியிட்ட முக்கிய குற்றவாளியான 24 வயது இளைஞர் நவீன் என்பவரை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர் பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே ராஷ்மிகவின் Deep Fake வீடியோவை வெளியிட்டுள்ளார். பிறகு இதனால் பிரச்சனை ஏற்படக்கூடும் என தெரிந்த உடன் அந்த பக்கத்தின் பெயரையும், வீடியோவையும் நீக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் Deep Fake வீடியோவை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!