India
கொரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல் செய்த எடியூரப்பா ஆட்சி : பா.ஜ.க MLA பரபரப்பு குற்றச்சாட்டு!
கொரோனா முதல் அலையின் போது, எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.40 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக விஜயாப்புரா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா பட்டீல் யத்னால் குற்றம்சாட்டினார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பசனகவுடா பட்டீல் யத்னால், ரூ.45 மதிப்பிலான முகக்கவசத்தை எடியூரப்பா ஆட்சியில் ரூ. 485 விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதாக அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். மேலும்
பெங்களூருவில், 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனையை உருவாக்கியதாகவும், ஆனால் அந்த 10 ஆயிரம் படுக்கைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ததில் எடியூரப்பா ஊழல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், கொரோனா காலத்தில் மருத்துவமனைகளுக்கான படுக்கைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். மருத்துவமனைகளில் வாடகைக்கு படுக்கைகளை எடுத்து விட்டு, வாடகைக்கும் ஒரு தொகை, அதே படுக்கையை கொள்முதல் செய்ததாகவும் ஒரு தொகை குறிப்பிட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஒரு படுக்கைக்கு ரூ.20 ஆயிரம் என மதிப்பிட்டு மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒருவருக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் பாஜக எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார். இதற்கான அனைத்து ஆதாரங்ளும் தன்னிடம் உள்ளதாக பாஜக எம்எல்ஏ பசனகவுடா பட்டீல் யத்னால் கூறியுள்ளார்.
எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியின் போது கொரோனா காலத்தில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே குற்றம்சாட்டியிருப்பது கர்நாடக அரசியலில் மட்டுமல்ல, டெல்லி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
-
எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
-
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து : பயணிகள் அவதி... விவரம் என்ன ?