India
திருமணமான 8 நாட்களில் மனைவியை தாக்கிய Youtuber... காதில் ஏற்பட்ட அடியால் நேர்ந்த சோகம் ! - நடந்தது என்ன ?
பிரபல சமூக வலைதள பேச்சாளராக இருப்பவர் (Vivek Bindra). 48 வயதான இவர் சமூக வலைதள பக்கங்களில் பிரபலமாக அறியப்படும் இவர் Bada Business Private Limited (BBPL) என்ற நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கிறார். இவர் Youtube மூலம் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பேசிவரும் நிலையில், இவருக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.
இந்த சூழலில் இவருக்கும் யானிகா என்ற பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் 6-ம் தேதி திருமணமாகியுள்ளது. திருமணம் முடிந்த பிறகு இவர்கள், விவேக்கின் அம்மாவுடன் வசித்து வந்துள்ளனர். இப்படியான நிலையில், திருமணம் முடிந்து 8 நாட்கள் கழித்து, அதாவது கடந்த டிசம்பர் 14-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் யானிகாவை, அவரது கணவர் விவேக் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து யானிகாவின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். அதாவது, சம்பவத்தன்று, விவேக் மற்றும் அவரது தாயாருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் யானிகா குறுக்கே பேசியுள்ளார். அப்போது அந்த சண்டை பெரிதாக ஆகியுள்ளது. இதனால் விவேக், யானிகாவை தனி அறையில் பூட்டி வைத்து தாக்கியுள்ளதாக, யானிகாவின் சகோதரர் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் யானிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உடலில் பல்வேறு இடங்களில் கடுமையான காயங்கள் உள்ளதாகவும், யானிகாவின் காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது செவித்திறன் பாதித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது சகோதரர் பு குற்றம்சாட்டியுள்ளார்.
இவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சண்டை நடந்தபோது, யானிகா வீட்டை விட்டு வெளியேறும்போது, அவரை விவேக் வீட்டிற்குள் சமாதானப்படுத்தி அழைத்து செல்வது போன்ற வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல பேச்சாளாராகவும், BBPL நிறுவனத்தின் சிஇஓ-வாகவும் இருக்கும் விவேக் பிந்த்ரா, 9 கின்னஸ் சாதனைகள் உட்பட 11 உலக சாதனைகளை பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?