India
மோடி இல்லத்தின் வாசலில் பத்ம ஸ்ரீ விருதை வைத்து சென்ற பஜ்ரங் புனியா: ஒன்றிய அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் வைத்துக் கடந்த மே மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
நமது நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலி போன்றவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியபோது கூட இவர்களின் கோரிக்கைக்கு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.
மேலும் போலிஸாரை கொண்டு போராட்டத்தை அடக்கப் பார்த்தது. ஆனால் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தினர். புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இப்படி பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடி வரும் நிலையில், அவர்களை அவமதிக்கும் விதமாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இதனைத் தொடர்ந்து கண்ணீர் மல்க தனது பூட்ஸை கழட்டி நான் மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகுவதாகச் சாக்ஷி மாலிக் அறிவித்தார். பிறகு பஜ்ரங் புனியாவும் விலகுவதாக அறிவித்து, தனக்கு கிடைத்த பத்ம ஸ்ரீ விருதைத் திருப்பி கொடுப்பதாகப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
பின்னர், பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை எடுத்துக் கொண்டு பிரதமரின் இல்லம் இருக்கும் கர்தவ்யா பாதையில் சென்றார். அப்போது போலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் அந்தச் சாலையிலேயே பத்ம ஸ்ரீ விருதை வைத்து விட்டு அங்கிருந்து திருப்பிச் சென்றார். இதையடுத்து போலிஸார் பத்ம ஸ்ரீ விருதைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், பஜ்ரங் புனியாவை தொடர்ந்து மற்றொரு மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் தனது பத்ம ஸ்ரீ விருதைத் திருப்பித் தருவதாக அறிவித்துள்ளார். இப்படி ஒன்றிய அரசுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய நாட்டிற்காகப் பதக்கம் வென்ற வீரர்களையே இப்படி மோடி அரசு நடத்துகிறது என்றால் நம்மைப் போன்ற சாதாரண மக்களை என்னபாடு படுத்துவார்கள் என்றும் பொதுமக்கள் முணுமுணுக்கிறார்கள்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!