India

தெலங்கானா : நண்பர் மற்றும் அவரின் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த கொடூரன்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம் !

தெலங்கானா மையம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூரைச் சேர்ந்த பிரசாத் (வயது 39) மற்றும் பிரசாந்த் ( வயது 25) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் 2018ம் ஆண்டு இளம்பெண் தற்கொலை குறித்து பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் துபாய் என்று அங்கிருந்து வழக்கு குறித்து தனது நண்பர் பிரசாந்திடம் கேட்டு வந்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் பிரசாத் 3.5 லட்சம் ரூபாய் வரை பிரசாந்த்க்கு கடன் கொடுத்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்ட நாடு திருப்பிய பிரசாத்தை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டாலும், கொலை குற்றம் காரணமாக அவரை கிராமமக்கள் ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர்.

இதனால் குடும்பத்துடன் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பல்வஞ்சா பகுதிக்கு இடம்பெயர்ந்தார் பிரசாத் தனது நண்பர் பிரசாந்திடம் கொடுத்த கடனை திரும்ப கொடுத்துள்ளார். மேலும், அவசர உதவிக்கு பணம் தேவைப்பட்டதால் தனது சொத்துக்களை அடகுவைத்து பணம் தருமாறு பிரசாந்த் பெயரில் தனது சொத்துக்களை மாற்றியுள்ளார்.

பிரசாந்த்

இதனிடையே பிரசாத்தை கொலை செய்தால் அவர் சொத்து அனைத்தும் தனக்கு சொந்தமாகி விடும் என கருதிய பிரசாந்த் பிரசாத்தை தனியே ஒரு இடத்துக்கு வரவைத்து பானோத் வம்சி மற்றும் குகுலோத் விஷ்ணு மற்றும் மைனர் வயதுடைய தனது சகோதரரை கூட்டு சேர்த்து தனது நண்பர் பிரசாத்தை கொலை செய்துள்ளார்.

அதோடு நிற்காமல் தனது நண்பரின் குடும்ப உறுப்பினர்களான பிரசாத்தின் மனைவி சான்விகா மற்றும் சகோதரி ஸ்ரவாணி,ஸ்வப்னா, இரட்டை குழந்தைகள் சைத்ரிகா ஆகியோரையும் தனி தனியே வரவழைத்து கொலை செய்துள்ளார். மேலும் இந்த கொலைகளுக்கு தனது தாயாரையும் கூட்டு சேர்ந்துள்ளது. எனினும் அவர்களிடமிருந்து பிரசாத்தின் தாயார் சுசிலா மட்டுமே தப்பியுள்ளார்.

இதில் பிரசாத்தின் சகோதரி ஸ்ரவாணியின் உடலை கைப்பற்றிய போலிஸார் அது குறித்து விசாரணை நடத்தியபோதுதான் பிரசாந்த் தனது நன்பர் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பிரசாந்த் மற்றும் அவருக்கு உதவியவர்களான குகுலோத் விஷ்ணு, பனோத் வம்சி, வட்டம்மா மற்றும் ஒரு சிறார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் அவர்களை கைது செய்தனர்.

Also Read: ஏழு மாதங்களுக்கு பின்னர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட 87 உடல்கள் : மணிப்பூர் கலவரத்தின் கோரம் !