India

அரசு வேலை வாங்கி தருவதாக இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரிகள் மேல் வழக்குப்பதிவு !

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 22 வயது பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு ர்க்கிள் அதிகாரி ராஜ் சேகர் என்பவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.

அதனை நம்பிய அந்த பெண் சர்க்கிள் அதிகாரி ராஜ் சேகர் மற்றும் அவரின் கீழ் பணியாற்றும் இரண்டு துணை ஊழியர்கள் ஜிதேந்திர குமார், மும்தாஜ் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ராஜ் சேகர் வீட்டுக்கு வருமாறு அந்த பெண்ணை கூறியுள்ளனர்.

அதன்படி அந்த பெண்ணும் சர்க்கிள் அதிகாரி ராஜ் சேகரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ராஜ் சேகர், ஜிதேந்திர குமார், மும்தாஜ் ஆகியோர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்/ மேலும், அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கவும் மறுத்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த பெண் கன்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அரசு அதிகாரிகள் என்பதால் இந்த வழக்கை பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இது குறித்து அந்த பெண் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதனடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒரே நாளில் 1.5 லட்ச Followers-ஐ இழந்த மும்பை இந்தியன்ஸ் : MI-யின் ஒரே முடிவால் CSKவுக்கு அடித்த யோகம் !