India

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக MLAக்கு 25 ஆண்டு சிறை- 9 ஆண்டு நடந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள துத்தி தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம்துலர் கோண்ட். இவர் 2014ம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் சகோதரர் வழக்குப் பதிவு செய்தார். பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், பா.ஜ.க எம்.எல்.ஏ ராம்துலர் கோண்டிற்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதத் தொகை முழுவதையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க நீதிபதி எஹ்சானுல்லா கான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக எம்.எல்.ஏ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Also Read: நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய கும்பலுடன் பா.ஜ.க MPக்கு தொடர்பு? : யார் இந்த பிரதாப் சிம்ஹா?