India
பாஸ்போர்ட் சரிபார்க்க போலிஸ் ஸ்டேஷன் சென்ற பெண்.. துப்பாக்கியால் சுட்ட போலிஸ் - உ.பியில் நடந்தது என்ன?
உத்தர பிரதேச மாநிலம் அலிகர் பகுதியை சேர்ந்தவர் இஷ்ரத் (55). இவர் புனித யாத்திரைக்காக சவுதிக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். இதன் காரணமாக பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக தனது மகனுடன் அலிகாரில் உள்ள காவல் நிலையத்திற்கு நேற்றைய முன்தினம் சென்றுள்ளார். அப்போது மனோஜ் குமார் தனது துப்பாக்கியை துடைத்துள்ளார்.
பின்னர் அவர் அந்த துப்பாக்கியை லோட் செய்துள்ளார். அந்த சமயத்தில் அந்த துப்பாக்கி அழுத்தப்பட்டு, அதில் இருந்த குண்டு, அருகில் நின்று கொண்டிருந்த இஷ்ரத் தலையில் பாய்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன, அவரது மகனும் அருகில் இருந்த சக போலீசாரும், உடனே அந்த பெண்ணை மீட்டு அருகில் இருந்த ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்த தகவல்கள் பூதாகரமான ஆன நிலையில், போலீஸ் அதிகாரி மனோஜ் குமாரை சக போலீசார் தேடினர். ஆனால் அதற்குள்ளும் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ்குமார் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து மேலதிகாரி ஒருவர் கூறுகையில், "துப்பாக்கியை துடைக்கும் தவறுதலாக குண்டு வெளியே பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டு விட்டது" என்றார்.
ஆனால் இதனை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மாறாக பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக பணம் கேட்டு இஷ்ரத்துக்கு அழைப்பு வந்ததாகவும், இதனால் தான் அவர்கள் காவல் நிலையம் சென்றதாகவும், அங்கே அவரிடம் போலீஸ் அதிகாரி பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் தான் இஷ்ரத் சுடப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது குண்டடி பட்ட இஷ்ரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை போலீசார் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறது. துப்பாக்கியால் சுட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்
-
Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !
-
தொடரும் அங்கீகாரம்... 55-வது கோவா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு ‘அயலி’ பரிந்துரை!
-
“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !
-
அவதூறு பேச்சு... பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி கைது... புழல் சிறையில் அடைப்பு !